தனியார் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வி குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

0 192
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  தனியார் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வி குறித்த விழிப்புணர்வை வேளாண் கல்லூரி மாணவர்கள் அளித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள இ.வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள் சார்பில் இன்று வேளாண்மை கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வேளாண்மை படிப்புகளின் முக்கியத்துவம், இன்றைய காலத்தில் வேளாண்மை துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், உயர் கல்வி வாய்ப்புகள்,அரசுத் திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக பி.எஸ்.சி (வேளாண்மை), தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வேளாண் பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு தொழில்வழிகாட்டல் குறிப்புகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.