செல்போன் கடையில் கொள்ளையடித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

0 130
Stalin trichy visit

திருச்சி, பிப்.24 மணப்பாறை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தவனுக்கு குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி நத்தம் பிரிவு சாலை அருகே உள்ள செல்போன் கடை மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி கடையின் ஹாஸ்பிடாஸ் மேற்கூரையை உடைத்து 60,000 பணம் கொள்ளை அடித்து சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நத்தம் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் அங்கும் இங்குமாய் சென்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த சோனி (எ) குமார் (38) என்பதும், இவன் பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு துவரங்குறிச்சியில் செல் போன் கடையின் மேற் கூரையை உடைத்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்றதும், இதே போன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவரங்குறிச்சி திருச்சி சாலையில் உள்ள ஒர்க் ஷாப்பில் ரூ.14,500 கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக அவனைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குமார் ரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வர் நாகரத்தினம் பரிந்துரையின் பேரிலும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை சுமார் 18 குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.