சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவுநாள் : தமிழ்நாடு பார்க்க குல சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 108
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2  சர் ஏ.டி. பன்னீர்செல்வம் 86வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவர்களின் மணிமண்டபத்தில் மாபெரும் ஊர்வலம் மற்றும் மாலை அணிவித்து கௌரவிக்கும் விழா நேற்று  நடைபெற்றது.

நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் பெரியாரும் வைரத் தூணுமான சர் A.T. பன்னீர்செல்வம் உடையார், பார்-அட்-லா., அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் இணைந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்நிகழ்வில் மாநில செயல் தலைவர்களான காளையார்கோவில் திரு. எஸ். விஸ்வநாதன் (ராமநாதபுரம்), சென்னை முனைவர் திரு. டி. இளஞ்செழியன், பொதுச் செயலாளர் திரு. பி.சி. செங்குட்டுவன், கீரனூர் திரு. எஸ். ஆனந்தமாணிக்கம், தேவகோட்டை திரு. எஸ். சீனிவாசன், தஞ்சை திரு. இராம. தியாகராஜன், பெரம்பலூர் திரு. டி. இரவி, திருச்சி திரு. சதீஷ் சந்திரசேகரன், திரு. ஆர்.டி. சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை–இராமநாதபுரம், தேவகோட்டை, அறந்தாங்கி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திருமதி லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அதேபோல், திருச்சி பார்க்கவன் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக tireless ஆக பாடுபட்ட சர் A.T. பன்னீர்செல்வம் அவர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு, அவரின் வழியில் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்ற உறுதிமொழியுடன் விழா நிறைவுற்றது.

Leave A Reply

Your email address will not be published.