அரசுப் பேருந்து மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் பலி

0 157
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2  திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையில் பாய்ந்த சரக்கு வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னையில் இருந்து பிளாஸ்டிக் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் என்ற இடத்தில் வந்தபோது  திடீரென கட்டுப்பாட்டை இழுத்த சரக்கு வேன் சென்னை – திருச்சி சாலையில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்தது.

அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற மற்றொரு மினி சரக்கு வேன் மோதி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்ததுடன்

அதனைத்தொடர்ந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு வேன் முன்பக்கம் உருக்குலைந்து வேனில் வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்கிரண், ஜெயபாண்டி இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சமயபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.