முசிறியில் த.வெ.க சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி, மார்ச் 2 முசிறியில் த.வெ.க சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் – வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய கட்சியினர் உறுதி
திருச்சி மாவட்டம், முசிறியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் களப்பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் முசிறி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை அமோக வாக்குகளில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது,
தேர்தல் காலத்தில் தொய்வின்றி தீவிரமாகப் பணியாற்றி, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்று சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.