முசிறியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு.

0 163
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2  முசிறி கைகாட்டியில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முசிறி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், முசிறி சப் கலெக்டருமான சுஷ்ரீசுவாங்கி குந்தியா 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் நடத்த தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்அதன் பேரில் முசிறி கைகாட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தி பொதுமக்கள் இடையே 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்விற்கு முசிறி வட்டாட்சியர் லோகநாதன் தலைமை வகித்தார். அப்போது 1.1.2026 தேதியை அடிப்படையாக வைத்து இளம் வாக்காளர்கள் தங்கள்
வாக்குகளை சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முசிறி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் சமையலர்கள் கலந்து கொண்டு கைகாட்டியிலிருந்து மக்கள் அங்காடி வரை மனித சங்கிலி நடத்தி நூறு சதவீத வாக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.