திருச்சி புறநகர் மாவட்ட DYFI பேரவை கூட்டம்

0 147
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2  திருச்சி, மார்ச் 2  திருச்சி புறநகர் மாவட்ட DYFI பேரவை கூட்டம் – அரசு காலிப்பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தி தீர்மானம்.

திருச்சி புறநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பேரவை கூட்டம் முசிறியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

பேரவையில் இளைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசுத் துறைகளில் உள்ள 1,00,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப் பணிகளில் நிலவும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். அனைவருக்கும் சமச்சீரான கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பான நிரந்தர வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.காவேரி உபரி நீரை மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பும் வகையில் புதிய வாய்க்கால்களை அமைத்திட வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு கலைக்கல்லூரி,
ITI மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முசிறி ஒன்றியத் துணைச் செயலாளர் யுவராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில இணைச் செயலாளர் மகாதீர் தொடக்கவுரையாற்றி பேரவையைத் தொடங்கி வைத்தார்.

மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் வாசு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் சங்கத்தின் எதிர்காலப் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

நிறைவாக, மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி நிறைவுரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளான இளைஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் விஜய பிரபாகரன் நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.