காட்டுப்புத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக திருவிழா
திருச்சி, மார்ச் 3 காட்டுப்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா: திருப்புகழ் பாராயணம்
காட்டுப்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலயத்தில் உள்ள ஸ்ரீ முருகப்பெருமான் சன்னதியில், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானின் முன்பாக திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. இந்த பக்தி நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்களும், பக்தர்களும் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் திருப்புகழ் பாடி முருகப்பெருமானை வழிபட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் சிவாச்சாரியார் செல்வசுப்பிரமணியகுருக்கல் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.