சமயபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பு: பொதுமக்கள் வாக்குவாதம்

0 100
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க மறுக்கும் அரசு பணியாளர் – பணிக்கு வருவாத மருத்துவர்களுக்கு எதற்கு சம்பளம் பொதுமக்கள் வாக்குவாதம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சமயபுரம் பகுதியில் உள்ள நரசிங்க மங்களம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது…

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஜாஸ்மின் எப்பொழுதும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வெளியில் உள்ள கதவை பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களை மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கும் ,அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் செல்ல அறிவுறுத்துவதால் அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மகள் ரித்திகா ஸ்ரீ – க்கு ஏதோ மர்ம பூச்சி ஒன்று கடித்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் குழந்தையின் தாயார் ராஜகுமாரி ஆனால் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜாஸ்மின் மருத்துவர் இல்லை என்றும் நீங்கள் உங்கள் குழந்தையை அருகில் உள்ள சீனிவாசன் தனலட்சுமி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கும் அல்லது மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது..

இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகள் தாயார் மற்றும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு எதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் இப்பகுதியில் உள்ளது செவிலியர் ஜாஸ்மின் தனிச்சையாக செயல்படுவதாகவும் ஆரம்ப சுகாதாரத்தில் பணியாற்ற மருத்துவர் பணிக்கு வராமல் இருப்பதாக குற்றம் சட்டி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் குறித்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சமயபுரம் நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்களை செவிலியர் ஜாஸ்மின் ஒருமையில் பேசுவதாகவும் ,மற்ற மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துவதாகவும் முறையான சிகிச்சை பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பணிக்கு வராத மருத்துவர் மற்றும் முறையற்ற செயல்படும் செவிலியர் இருவரையும் கண்டித்து எங்களுக்கு இப்பகுதியில் எதற்கு மருத்துவமனை எதற்கு சம்பளம் என குற்றம் சாட்டினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு தகவல் தெரியாது போல பேசியும் ,தனக்கு சம்பந்தமில்லாத துறையில் நடப்பது போல் கண்டுகொள்ளாமல் பதில் கூறினார்…

Leave A Reply

Your email address will not be published.