மணப்பாறையில் மறைக்கப்படாமல் உள்ள தலைவர்களின் சிலைகள்

0 68
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16  மணப்பாறையில் தேர்தல் அறிவிக்கப்பட்டும் இன்னும் மறைக்கப்படாமல் உள்ள தலைவர்களின் சிலைகள். மந்தமாக நடைபெறும் தேர்தல் பணிகள்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார், கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர், வடுகபட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைகள் இன்னும் மறைக்கப்படாமல் உள்ளது. சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தாலும் கூட தலைவர்கள் சிலைகள் மறக்கும் பணி இன்னும் தொடங்காமல் மந்த நிலையிலேயே உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.