மணப்பாறை அருகே குடியிருப்பில் புகுந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, மார்ச் 17 மணப்பாறை அருகே ஆட்டம் காட்டிய பாம்பை படாத பாடுபட்டு பிடித்த தீயணைப்பு வீரர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுகாலணி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சாரைப்பாம்பு புகுந்ததை அடுத்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சென்று பார்த்த போது சாரைப்பாம்பு மின்னல் வேகத்தில் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த கல்லுக்குள் புகுந்து கொண்டது. இதையடுத்து கல்லை அப்புறப்படுத்தி பாம்பை பிடிக்க முயன்ற போது உடனே அருகில் இருந்த மரத்தில் ஏறியது . பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி பாம்பை பிடித்து எடுத்து சென்று பின்பு வனப்பகுதியில் விட்டனர்.