மணப்பாறை ரயில்நிலையம் அருகே பிரிண்டர்ஸ், ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து : போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்
திருச்சி, மார்ச் 31 மணப்பாறை ரெயில் நிலையம் அருகே பிரிண்டரஸ், ஸ்டேஷனரி கடையில் பயங்கர தீ விபத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க கடும் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவர் பிரிண்டர்ஸ் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார். இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி சுமார் ஒருமணி நேரமாக நடைபெற்றது.
ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்கொண்டு வந்தனர்.