மணப்பாறை அருகே கைகாட்டி பாலத்தின் அடியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

0 15
Stalin trichy visit

திருச்சி, மே 8  மணப்பாறை அருகே கைகாட்டி பாலத்தின் அடியில் பாதி எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கைகாட்டி- கல்லா மேடு இடையே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் அடியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் காவியா , வளநாடு காவல் ஆய்வாளர் சரண்யா ,மணப்பாறை காவல் ஆய்வாளர் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் இவர் யார் என்றும், எப்படி பாதி எரிந்த நிலையில் பாலத்தின் அடியில் வந்தார் , யாரேனும் இவரை கொலை செய்து விட்டு தீயை பற்ற வைத்துவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.