பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி பலி

0 12
Stalin trichy visit

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வெங்கைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (46). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறை மாரியம்மன் கோவில் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவருக்குத் தலை மற்றும் மூக்குப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மணப்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ந பாலசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.