லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளர் கைது

0 16
Stalin trichy visit

திருச்சி, மே 9  அரசு நிலத்தை கிரையம் செய்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி, அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார் கலா பெயரில் சத்து மாவு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். மேற்கண்ட நிறுவனத்திற்கு டான்சிட்கோ மூலம் திருச்சி துவாக்குடியில் உள்ள TANSIDCO INDUSTRIAL ESTATE-க்கு சொந்தமான இடத்தில் பிளாட் எண்.3 என்றபிளாட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ.20,000/-ஐ, திருச்சி, TANSIDCO கிளை மேலாளர் சத்தியராஜ் என்பவர் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பாத முரளி,நேற்று (மே 8) திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்பு பிரிவில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்
தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்களுடன் நேற்று மதியம் இரசாயனப் பொடி தடவிய பண நோட்டுகளை புகார்தாரர் முரளியை திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் . சத்தியராஜ், வயது 51என்பவர் புகார்தாரரிடம் இருந்து பொடி தடவப்பட்ட லஞ்சப் பணம் ரூ.20,000/-ஐ கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை செய்தனர். பின்னர் சத்தியராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் டான்சிட்கோ நிறுவன வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.