மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்

0 20
Stalin trichy visit

திருச்சி, மே 9  மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  மேயர் மு. அன்பழகன்  தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை அறிவித்தனைத் தொடர்ந்து கடந்த (15.03.2026) முதல் தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் 07.05.2026ம் தேதி முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் எதிர்வரும் 11.05.2026 முதல் பிரதி வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மாண்புமிகு மேயர் அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என  மேயர் மு. அன்பழகன்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.