பல்வேறு மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருச்சியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, மே 12 பல்வேறு மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருச்சியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான அடக்குமுறைகளை கண்டித்தும், 3 மாத காலமாக போராடும் 40 ஆயிரம் தொழிலாளர்களில் 1000க்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும்,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ 26000 வழங்க வேண்டும் எனவும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓவர் டைம் வேலைக்கு இரட்டை ஊதியம், வாராந்திர ஓய்வு,
இ.எஸ்.ஐ, பி.எப், போனஸ் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் எனவும், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும்
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்.பி.எஃப், சி.ஐ.டி.யு ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.எல்.எப், யு.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.சி.சி.டி.யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.