சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபம் நாளை முதல் இடிப்பு
திருச்சி, மே 12 சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முன்புறம் கிழக்குப் பகுதி யில் உள்ள மண்டபம் புதன்கிழமை (மே 13) முதல் 15 நாள்களுக்கு இடிக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரி யம்மன் திருக்கோயிலின் ராஜகோபு ரத்தின் முன்புறம் கிழக்கு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆர் சிசி மண்டபத்தை மே 13-ஆம் தேதி வருவாய் துறை, பேரூராட்சி நிர்வா கம், காவல் துறை, சுகாதாரத் துறை,
தீயணைப்புத் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கப் பட உள்ளது. சுமார் 15 நாள்கள் இப் பணி நடைபெறும். அப்போது,அருகில் குடியிருப்போர் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும், பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி இடிக்கும் கட்டடத்தின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.