த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியில் லஞ்சம் – ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 16
Stalin trichy visit

திருச்சி, ஆக.17  த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியில் லஞ்சம் – ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : என்று அறநிலை துறை அமைச்சர் ரமேஷ்  பேட்டியளித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில்

த.வெ.க அரசின் 100 நாள் ஆட்சியில் தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. இதுதான் 100 நாளில் நாங்கள் செய்த மிகப்பெரிய சாதனை. அடுத்தடுத்த நாட்களில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக மாற்றுவோம்.

சுற்றுலாத்துறையையும் ஆன்மீக துறையையும் பிரிக்க முடியாது. நம்முடைய பாரம்பரியமிக்க கோவில்களின் புகழை இன்னும் அதிகமாக உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுப்போம்.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் ‘ரோப் கார்’ வசதி அமைக்க முடியாது என ஆய்வுகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. எனவே நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அங்கு அதற்கு மாற்றாக வேறு என்ன செய்ய முடியும் என்பதை உலகின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்களோடு சேர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம்.

திமுக ஐந்தாண்டுகளில் ஏழரை லட்சம் கோடி கொள்ளை அடித்து சென்றதாக தவெக எம்எல்ஏ கூறியுள்ளார். அதை எப்போது மீட்க போகிறீர்கள்? என்கிற கேள்விக்கு..

இதையெல்லாம் மீட்பதற்கு இலக்கு வைத்து ஒரு அரசு பணியாற்ற முடியாது. நாங்கள் நேர்மையான நியாயமான லஞ்ச லாவண்யமற்ற ஒரு தலைசிறந்த மனசாட்சியுடன் கூடிய மக்களாட்சியை உருவாக்குவதற்கு பணியாற்றி வருகிறோம்.

கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் விரிவாக பேசுவார்கள்.

100 நாளில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் இந்த ஆட்சியை வரவேற்று இருக்கிறார்கள். முதல்வரை பாராட்டி இருக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக 100 நாளில் எதையும் செய்யவில்லை என பேசுகிறார்கள்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்த காலங்களில், முதல் 100 நாளில் தமிழ்நாட்டை தலைகீழாக திருப்பி விட்டார்களா? தற்போது, நாங்கள் முதலில் நிதி நிலையை சரி செய்ய வேண்டும். அதன் பின்பு மக்களுக்கு தேவையான திட்டங்களை வகுப்போம்.

கோயில்களில் பிரசாதங்களை இந்து சமய அறநிலைத்துறை மூலமாகவே தயாரிப்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

திருச்செந்தூர் கோவில்களில் அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில், அங்கு அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வவகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் தயாரிக்கப்படும் ‘அக்கார வடிசல்’ பிரசாதம் சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ‘அக்கார வடிசல்’ பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

ஸ்ரீரங்கத்தில் சேவை நேரம் அதிகரிப்பது தொடர்பாக ஆகம விதிகள், பக்தர்களின் வேண்டுகோள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து முடிவு எடுப்போம். தற்போதைக்கு அது குறித்த எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.