கல்லக்குடி காவல் நிலையத்தில் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதித்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து கல்லக குடி பேரூராட்சி நிர்வாகம் மூலம் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே புறக்காவல் நிலையமாக அமைத்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளை பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது, கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து அந்தப் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தட்டி வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி பகுதியில் ஒலி பெருக்கியுடன்யுடன் கூடிய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.