ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்
திருச்சி, மே 16 ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தென்னை பயிரில் ஊடு பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தென்னை பயிரில் ஊடு பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவனம் சார்பில் சார்பில் Dr. வினோத் உதவி கல்வியாளர் பேசுகையில் மண் மாதிரி சேகரித்தல், தக்கை பூண்டு விதைப்பு, மண்புழு உரம் பயன்படுத்துதல், ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துதல், பருவத்தில் பயிர் செய்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துதல், தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஊடு பயிர் வாழை சாகுபடி, பாரம்பரிய நெல் சாகுபடி, இயற்கை இடு பொருள்கள் தயார் செய்தல், பஞ்சகாவியா மீன் அமிலம் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விவசாயிக்கு விளக்கி கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் கவிமாலா பேசுகையில் நில உடமை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் கணினி சிட்டா உடன் பதிவு செய்து விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சபரி செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ஜஸ்டின் சுசில் ஆகியோர் செய்து இருந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் , மண் மாதிரி சேகரிப்பு களர் நிலம் சீர்திருத்தம் செய்தல் துண்டு பிரசுரம் மற்றும் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , சாகுபடி குறிப்பேடு பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது .