திருச்சி விமான நிலையத்தில் ரூ 15 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் ரூ 15 கோடி மதிப்புள்ள மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா பறிமுதல் – பயணிகள் 3 பேர் கைது
மத்திய வருவாய்த் புலனாய்வுத்துறையினர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த
இரண்டு பயணிகளை சோதனை செய்தனர். அவர்களின் உடைமைகளிலிருந்து ரூ 10 கோடி மதிப்புள்ள மெத்தபட்டமைன் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்றதை
மத்திய வருவாய்பாபுலனிய்வுத்துறை பறிமுதல் செய்தனர்.
மேலும் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ராஜஸ்தானைத் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ ஐந்து கோடி
என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ 15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் திருச்சி விமான நிலையத்தில்
மத்திய வருவாய்த் புலனாய்வுத்துறையினர் அதிகாரிகள் பறிமுதல் செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டம் மலேசியாவில் இருக்கும் நிலையில் இந்த போதைப் பொருள்கள்
இரு மார்க்கங்களிலும் பிடிபட்டுள்ளது பிண்ணனியில் சர்வதேச கடத்தல்காரர்கள் தொடர்பு இருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.