திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 54
Stalin trichy visit

திருச்சி, மே 21 நீர்வளத் துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் வே. சரவணன் பின்னர் கூறியதாவது:

2026-27ஆம் ஆண்டுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 1161 பணிகள் 5954.937 கி.மீ.நீளத்திற்கு ரூ.125.00 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற் கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட் டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால் கள் ஆகியவற்றில் 112 பணிகள் 314.34 கி.மீ. நீளத்திற்கு ரூ.15.49 கோடி யில் ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தூர்வாரும் பணிகளில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் வாயிலாக 62 பணி கள் 226.53 கி.மீ. நீளத்திற்கு ரூ.9.24 கோடியிலும் மற்றும் அரியாறு வடிநி லக் கோட்டம் வாயிலாக 50 பணிகள் 87.810 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.25 கோ டியிலும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெறுகின்றன.

லால்குடி வட்டத்தில் கோவண்டாக்குறிச்சி, முள்ளால் மற்றும் விர சாலூர் கிராமத்தில் நந்தியாறு யுள்ளம்பாடிகால்வாய்களில் நடைபெ றும் தூர்வாரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்ததில், பணிகள் குறிப்பிட்ட இலக்கில் செல்வதை உறுதி செய்துள்ளேன். மேலும், பணி களை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள நீர்வளத்துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்டத்தில் நடைபெறும் 112 பணிக ளில் இதுநாள் வரை 95 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

வருகிற ஜூன் மாதம் மேட்டூர் அணை திறப்பிற்கு முன் அனைத்து பணிகளும் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின் றன. இந்த சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் முழுமை யாக தூர்வாரப்படுவதால் சுமார் 8835 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று மாவட்ட  ஆட்சியர் கூறினார்.

ஆய்வின்போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் அ.நித்தியானந்தன், உதவி செயற்பொறியாளர் வே. தினேஷ்கண்ணன், உதவிப் பொறியாளர்கள் ஜ. ஹரிகிருஷ்ணபிரபு, .எம்.ஜி. ரேகா ஆகி யோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.