ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
திருச்சி மே 22- திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாலமன் ராஜ் இவரது மனைவி ஆனந்தி (வயது 46) புற்றுநோயாளி. இவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அங்கு டாக்டர் யிடம் காண்பித்து விட்டு மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் சத்திரம் பேருந்து நிலையம் சென்றார். பிறகு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி க்குமற்றொரு தனியார் பேருந்தில் ஏறிக் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது பழைய பால் பண்ணை அருகில் பஸ் வந்தபோது ஆனந்தி கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க நகை காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தார் இதையடுத்து அவர் அங்கிருந்து இறங்கி அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தியிடம் காணாமல் போன 3 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.