திருச்சி மாநகராட்சியில் சில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

0 39
Stalin trichy visit

திருச்சி, மே 21 துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகராட்சியில் சில பகுதிகளில் வெள்ளிக்கி ழமை (மே 22) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந் தான் படித்துறை, பொது தரை மட்ட நீர்தேக்கத் தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகம் செய்யும் சிறீரங்கம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெறும் மின்பராமரிப்புப் பணியால் மத்திய சிறைச்சாலை, சுந்தராஜபுரம் புதியது – பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது – பழையது, அன்பு நகர் பழையது – புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர், இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது – பழையது, ரயில் நகர் புதியது – பழையது, முன் னாள் ராணுவத்தினர் காலனி புதியது பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை, நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது அம்பேத்கர்நகர், விவேகானந்தர் நகர், எல்அய்சி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏஅய்பிஇஏ நகர், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், டி.வி. கோவில், தேவதானம், விற குப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக் குழி, அரியமங்கலம் உக்கடை, வடக்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் வரும் வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது.

மே 23 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்ப டும். எனவே, பொதுமக்கள் இந் தச் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன் படுத்துமாறும், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.