பொன்மலை பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட மூன்று ரவுடிகள் கைது
திருச்சி மே22 திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த 21 ந்தேதி இரவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்பொழுது ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சென்ற பொழுது அங்கு ஒரு கும்பல் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில் மூன்று பேர் மட்டும் சிக்கிக் கொண்டனர். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது மேற்கண்ட ஆறு பேர் சேர்ந்து பொன்மலைப்பகுதியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பொன்மலை முன்னாள் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் மற்றும் பொன்மலைப்பட்டியை சேர்ந்த மதன் (வயது 33) கணேசபுரத்தை சேர்ந்த பால் ராஜேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பொன்மலை பட்டியை சேர்ந்த மற்றொரு மதன், சேவாக், ராம் பிரசாத் ஆகிய மூன்று ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட மூன்று ரவுடிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள மேற்கண்ட ரவுடிகளிடமிருந்து கத்திகள், கயிறு மிளகாய்ப்பொடி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.