திருச்சியில் வணிக வளாகம் அருகில் முதியவர் பிணம்
திருச்சி மே 22 திருச்சி சின்ன கடை வீதி பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்ற முழு விவரம் தெரியவில்லை. இதையடுத்து திருச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் அனீஸ் பாத்திமா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்வது இறந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.