திருவரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது

0 145
Stalin trichy visit

திருச்சி மே 22 – திருவரங்கம் ரெயில்வே பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்துக்கொண்டி ருந்த இரண்டு வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது திருவரங்கம் கீதா புரத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 29)திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த புல்லட் மணி (வயது 32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.