பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

0 23
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முரளி சுந்தரம். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு வலது புறத்தில் 10 அடி அகலம் உள்ள சாலை இருந்தது. 1947ம் ஆண்டில் மூல பத்திரத்தில் இந்த சாலை குறித்த தகவல் பதிவாகியுள்ளது.

இவரது அருகில் வசித்து வரும் அனந்த சங்கர் என்பவரது வீட்டு மூல பத்திரத்திலும், 1963ம் ஆண்டில் வடபுறம் பொது பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் கண்ணன், ஜோதி பாய், சகுந்தலா பாய் ஆகியோர் 1977ம் ஆண்டில் திருச்சி நீதிமன்ற உத்தரவில் வரைபடத்தில் ரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோதிபாய் கிரைய ஆவண எண் 5285/1981ல் பொதுபாதை இருபுறமும் உள்ளது.

1981க்கு பிறகு கண்ணன் வைத்திருக்கும் வரைபடத்தில் அந்த பாதை இல்லை. ஆனால் முரளி சுந்தரம் மாநகராட்சியிடம் இருந்து பெற்ற அத்தனை ஆவணங்களிலும் பாதை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இதை பொது பாதையாக பராமரிக்க வேண்டும் என்று சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் மதுரை உயர்நீதிமன்றம் மாநகராட்சியிடம் பாதையை ஒப்படைத்து, கண்ணன் ஜோதிபாய் ஆக்கிரமித்து இருக்கும் பாதையை மாநகராட்சி ஆக்கிரமிப்பில் இருந்து எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பிறகு வரைபடத்தில் இருந்து பாதையை எப்படி எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. பொதுபாதையை ஏன் கண்ணனுக்கு பட்டா போட்டு கொடுத்து உள்ளனர். முரளி சுந்தரம் மூலப் பத்திரத்தில் 1947 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஆவணங்களில் வலது புறம் பொது பாதை என்றுதான் உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜி, மாநகராட்சி பொன்மலை மண்டல உதவி செய்ய பொறியாளர் வேல்முருகன், அதிகாரிகள், சர்வேயர், காவல்துறையினர் இன்று சம்பந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் முதலில் கொண்டு வந்த வரைபடத்தில் பொதுப்பாதை என்று இருந்தது ஆனால் இதன் பின்னர் வேறு ஒரு வரைபடத்தை கொண்டு வந்து பொது பாதை இல்லை என்பதை சுட்டிக்காட்ட முயன்றனர்.

ஆனால் முரளி சுந்தரம் இதில் தலையிட்டு அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பொதுபாதை என்று உள்ள வரைபடத்தை வைத்துதான் அளக்க வேண்டும் என்று அவர் கூறினார். அப்போது இருவரின் இடையே சமரசம் ஏற்படாததால் அளக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.