வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜூன் 3 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்-ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதிக்தயாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.