கலைஞரின் 103-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் வட்ட கழகச் செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கலைஞரின் 103 ஆவது பிறந்தநாளை யொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்குத் தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர வட்ட கழகச் செயலாளர்களுக்குப் பொற்கிழிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ண் அரங்கநாதன், கே.என்.சேகரன், பகுதி செயலாளர்கள், மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.