விளைநிலம் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு முகாம்
திருச்சி, ஜூன் 4 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முமுடிசோழமங்கலத் தில் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் சத்யபிரியா தலைமையில் நடைபெற்றது.
இதில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் அதன் பயன்கள் குறித்தும், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைப்பதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
வேளாண்மை கல்வி நிலையம் உதவி பேராசிரியர் வினோத் பேசுகையில் குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். இதில் முன்னோடிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்கள் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.