திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

0 27
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 குடிநீர் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீரேற்று நிலையம் ஆகியவற்றிலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய்களை குடமுருட்டி அருகே புதிதாக பதிக்கப்பட்ட புதிய குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது.
இதனால் நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வெள்ளிக்கி ழமை மட்டும் இருக்காது. சனிக்கிழமை முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொருத்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதுடன், குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.