பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தற்போதைய தமிழக அரசு தேர்தலுக்கு முன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் ஐந்து ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்து உள்ள விவசாய கடன் பெற்றிருந்தால்
அவர்கள் பெற்றுள்ள விவசாய கடன் பாதி தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்து உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ரூ 50 ஆயிரத்திற்கு கீழே விவசாய கடன் பெற்றிருந்தால் அவர்களின் விவசாயகடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதற்கு மேல் கடன் பெற்றவர்களின் கடன்கள் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதி மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தித்து உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் அனைத்து கட்சியினரும் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் அதேபோல் உயர்த்தியுள்ள உரங்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், செல்வராஜ், அதிமுக நிர்வாகிகள் எஸ் கே டி கார்த்திக், முத்துக்குமார், திமுக நிர்வாகி தங்கவேல்,, வேலுச்சாமி. புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பிச்சைமுத்து, உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் விஜய தேர்தலுக்கு முன்பாக கொடுத்த பல்வேறு வாக்குறுதலில் விவசாயம் சம்பந்தமான ஒரு வாக்குறுதியை தஞ்சாவூர்லயும் பல்வேறு பரப்புரையிலும் சொன்னார்.

அதில் 5ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் பயிர் கடனாக கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெற்ற பயிர் கடன்களை அனைத்தையுமே ரத்து செய்கிறோம். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்.

ஆனால் இப்போ தமிழக அரசு அறிவித்துள்ள அந்த அறிவிப்புக்கும் அவங்க அறிவிச்சதுக்கும் சம்பந்தமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கு.

வெறும் ரூ50 ஆயிரம் மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்று சொல்வது எந்த விவசாயியும் ரூ 50, ஆயிரத்திற்கு குறைவாக பயிர் கடன் பெற்று இருப்பது ரொம்ப குறைவு. ஊருக்கு இரண்டு அல்லது மூன்று பேர் தான் இருப்பாங்க.

மற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் தான் தள்ளுபடி என்பது இன்றைக்கு இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகள் அதைக் கண்டிச்சு மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு என்ற அடிப்படையிலும் சங்கங்களின் சார்பாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கிட்டு இருக்காங்க. அரசு இதுவரைக்கும் செவிசாய்க்கவில்லை.

ஆனா இப்போ ஒரு தகவல் என்ன வந்திருக்குன்னு சொன்னா இந்த அறிவிப்பு என்பது வாபஸ் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இன்று தமிழ்நாடு அரசினுடைய அமைச்சரவை கூட்டம் இன்றைக்கு நடக்குது. இந்த அமைச்சரவை கூட்டத்துல ஏதாவது அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்க்கிறோம்

தற்போது தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி படி விவசாய கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்தும் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் பிரபித்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

புதிய அறிவிப்பாக ஐந்து ஏக்கருக்குள் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அந்த கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

மத்திய அரசாங்கம் விவசாயிகள் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இந்த நேரத்துல உரத்தினுடைய விலையை ஏற்றியிருக்கிறார்கள்.

சாதாரணமா பார்த்தீங்கன்னா ரூ200 இருந்து ரூ450 மற்றும் மூன்று மடங்கு உரத்தினுடைய விலை என்பது தொடர்ந்து ஏறிக்கிட்டே இருக்கு. அதை உடனடியாக வாபஸ் வாங்கணும்.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் காரணமாக விவசாயிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய டிராக்டர், நெல் அறுவடை எந்திரங்கள் போன்றதற்கு ரூ1,000 மேல் வடகை விலை உயர்ந்துள்ளது

விவசாயி சாகுபடி பண்றதுக்கு ஏற்கனவே செலவு 40,000 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 50,000 ரூபாய் என் அளவிற்குஏற்படும்.

இதனால் விவசாயியும் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் உடனடியாக மத்திய அரசு உரத்தின் விலையை கட்டுப்படுத்தணும். வாபஸ் வாங்கணும். ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க, விவசாயிகளை பாதுகாக்க நீங்க அறிவித்த அந்த அடிப்படையில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

என்று திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் ஒன்று கூடியிருக்கிறார்கள். முதல் கட்ட போராட்டமா இன்னைக்கு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்து

இந்த போராட்டம் முதல் கட்ட போராட்டம். மீண்டும் இந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்று சொன்னால் தொடர்ந்து இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே ரிசர்வ் வங்கி அங்கேயும் இருக்கு. இங்க சொல்றது ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்றாங்க. அங்கு 2 லட்சம் வரைவிவசாய கடன் தள்ளுபடி அறிவித்து இது 36 கோடி 500 கோடி வரைதள்ளுபடி செய்துள்ளனர்.

இங்க வெறும் 2,000 கோடிக்குதான் தள்ளுபடி பண்றாங்க. இது நியாயம் இல்லை. விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்குது. எனவே உடனடியாக இதை வாபஸ் வாங்கணும்.

புதிய அறிவிப்பு கொடுக்கணும்னுஎன கேட்டுக் கொள்வதோடு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.