சிறுநீரகம் பாதிப்படைந்த தொழிலாளி குடும்பத்திற்கு மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன் நிதியுதவி
திருச்சி, ஜூன் 6 திருச்சி மாவட்டம், மணப்பாறை 15 வது வார்டு சேதுரத்தின புரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (43) இவரது மனைவி சுகன்யா இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் பரணிராஜன் பத்தாம் வகுப்பும், மகள் அஸ்மிதா ஸ்ரீ 6 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாண்டியராஜனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார் இதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவனிடம் தனது குடும்ப நிலை குறித்து மனு அளித்திருந்தார்
அவரின் மனுவை ஏற்று நேற்று காலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் தனது அலுவலகத்திற்கு குடும்பத்தினரை வரவழைத்து தற்போது குடும்ப செலவினங்களுக்காக ரூ 25 ஆயிரம் பணம் ரொக்கமாக வழங்கினார்
மேலும் குழந்தைகளிடம் எம் எல் ஏ ரா கதிரவன் படிப்பு சம்பந்தமான குறைகளை கேட்டார் படிப்பு சம்பந்தமான எவ்வித உதவியாக இருந்தாலும் உடனடியாக தெரியப்படுத்தும்படி கேட்டு கொண்டார்.
சிறுநீரகம் பாதிப்படைந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ரா கதிரவன் உதவி செய்ததை குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.