குடும்ப தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது

0 578
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம்(52). வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பக்கவாத நோய் உள்ளவர். இவரது தம்பி வெங்கடேசன்(33) உள்அரியமங்கலம் ரிட்ஸ் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அண்ணன் கார்மேகம் வீட்டிற்கு வெங்கடேசன் சென்றுள்ளார். பின்னர் குடும்ப பிரச்சினை தொடர்பாக கார்மேகம், வெங்கடேசன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தள்ளு முள்ளாக மாறி இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அண்ணன் கார்மேகத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

இதனால் தரையில் விழுந்தபோது அருகிலிருந்த இரும்பு கதவில் மோதியதால் கார்மேகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கார்மேகத்தை உறவினர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அளித்து வந்தது. மேலும் கார்மேகம் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்மேகம் உயிரிழந்தார். கார்மேகம் உயிரிழந்த நிலையில் அரியமங்கலம் போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி கொலையாளி வெங்கடேசனை தேடி வந்தனர். இந்நிலையில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.