திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திவ்யா(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நேரத்தில் திவ்யா திடீரென்று சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த தீ விபத்தில் திவ்யா உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.