வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு : தொலைநோக்கியில் பார்த்த அரசுப் பள்ளி மாணவர்கள்

0 55
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 13 வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு-வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் தொலைநோக்கியில் பார்த்த மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற வானியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் தொலைநோக்கி மூலம் வெள்ளி–வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், மாநில செயலாளர் TASS முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இது மாணவர்களிடையே விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தன. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் வெள்ளி கோள், வியாழன் கோள், புதன்கோள் மற்றும் சூரிய கரும்புள்ளி ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் ஹரிப்பிரியா, மித்ரா மற்றும் பவித்ரா ஆகியோர் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.

வானியல் ஆர்வலர்களை கவர்ந்த அரிய வானியல் நிகழ்வாக, சூரிய குடும்பத்தின் மிகப் பிரகாசமான இரண்டு கோள்களான வெள்ளி கோள் மற்றும் வியாழன் கோள் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாலை வானில் ஒன்றுக்கொன்று மிக அருகில் தோன்றின. இந்த நிகழ்வு “கோள் ஒருங்கிணைவு” (Planetary Conjunction) என அழைக்கப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. ஜூன் மாதத்தின் முக்கியமான வானியல் காட்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கத்தில் தலைமையாசிரியர் ஜெயப்ரியா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார்.

இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் ஹரிப்பிரியா, மித்ரா மற்றும் பவித்ரா ஆகியோர் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.