உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. எங்களை நிர்பந்திக்கவில்லை ஞ தமிழன் அன்சாரி பேட்டி

0 13
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 29  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக எங்களுக்கு எந்த நிர்பந்தமும் அளிக்கவில்லை, திமுக – பா.ஜ.க கூட்டணி என்பது திமுகவை தனிமைப்படுத்த சிலர் பரப்பும் வதந்தி – தமிமுன் அன்சாரி பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி வருகிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பி.சி.எம் பட்டியலில் சேர்க்க கூடாது என அளித்த தீர்ப்பு அவரின் மத வெறியை காட்டியுள்ளது.

வஞ்சகமும்,வன்மமும் நிறைந்த வகையில் அவரின் தீர்ப்புகள் உள்ளது. திருப்பரங்குன்றம், பக்ரீத் குர்பானி,இட ஒதுக்கீடு உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான வழக்குகள் அவரிடமே செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரின் தீர்ப்புகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது

சட்டம் ஒழுங்கையும் ஜனநாயகத்யையும் நீதிமன்றம் காக்க வேண்டும். இனி வரும் காலங்களில் ஜாதி மதம் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும்.

45 நாட்களில் ஆட்சியை மதிப்பிட முடியாது. ஆறு மாத அவகாசம் வாக்குறுதிகளை நிறைவேறுவதற்கான அவகாசம் தான்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக கால அவகாசம் கொடுக்க முடியாது. பாலியல் குற்றங்கள் தொடர்பாக 250 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சமூக சீர்கெட்டின் காரணமாக தான் நடந்துள்ளது. இதை த.வெ.க அரசு சீர் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

தேர்தலில் தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் எங்களுக்கு தனி சின்னம் இல்லை. சுயேட்சை சின்னத்தில் நின்றால் அது கிடைக்க தாமதமாகி தேர்தல் வெற்றியை பாதிக்கும் எனவே எங்கள் தலைமை நிர்வாக குழு கூடி திமுக சின்னத்தில் நிற்பது என முடிவெடுத்தோம். உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என திமுக எங்களுக்கு எந்த நிர்பந்தம் தரவில்லை.தனி சின்னம் இருந்திருந்தால் தனி சின்னத்தில் நின்றிருப்போம் எதார்த்தத்தை புரிந்து கொண்டு உதயசூரியன் சின்னத்தில் நின்றால் வெற்றி கிடைக்கும் என்ற அடிப்படையில் போட்டியிட்டோம். மல்லுக்கட்டி இருந்தால் பின்னடைவை தான் சந்திந்திருப்போம்.

எங்களுக்கு கொள்கை கோட்பாடுகள் இருக்கிறது நாங்கள் த.வெ.க கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் வேடந்தாங்கல் பறவைகளாக இருக்க கூடாது.
வெற்றி தோல்வியை கடந்து நாங்கள் அரசியலை பார்க்கிறோம்.

வேடந்தாங்கல் பறவைகள் என்பவர்கள் கூட்டணி வைத்தவர்கள் கிடையாது கட்சியிலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்தவர்கள் தான்

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தியேட்டர்களில் அலை மோதுவது போல்த.வெ.கவில் சேர பனையூர் பங்களா வாசலில் காத்து நிற்கிறார்கள்.

திமுக பாஜக கூட்டணி என்கிற கருத்து திட்டமிட்டு பரப்படுகிறது. திமுகவை தனிமைப்படுத்த இது போல் சிலர் பரப்புகிறார்கள்.குறிப்பாக டெல்லியிலிருந்து அது பரப்பப்படுகிறது. அது வெறும் வதந்தி தான். திமுக பாஜக கூட்டணி என்பதில் எந்த முகாந்திரமும் இல்லை

பாஜகவின் நிழலில் பக்கம் கூட திமுக செல்ல்க்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சியை செம்மையாக வழி நடத்தி இருக்க வேண்டும்.  அவர்கள் கவனத்தோடு இருந்திருக்க வேண்டும்.

திராவிட கட்சியில் பயணித்த செங்கோட்டையன் ஜாதி அடையாளம் அட்டை தொடர்பான முடிவை அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஜாதி ஒழிப்புக்காக பல தலைவர்கள் போராடி இன்று ஜாதி விவகாரத்தில் தமிழக மக்கள் முற்போக்காக உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் செங்கோட்டையன் கூறிய கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.