திருச்சி மலைக்கோட்டைக்கு நவீன மோனோ-கேபிள் மூலம் ரோப்கார்”: முதல்வர் விஜய் உத்தரவிட பொதுமக்கள் எதிர்பார்ப்பு

0 16
Stalin trichy visit

திருச்சியின் அடையாளமாகவும், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும் திகழ்வது உச்சிப்பிள் ளையார் வீற்றிருக்கும் மலைக்கோட்டை ஆகும். பழமையான உலகப் பாறை அமைப்புகளில் ஒன்றான இந்த மலைக்கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என் பது திருச்சி மக்களின் அரை நூற் றாண்டு கால கனவாகும்.
திருச்சி மலைக்கோட்டை தரையிலிருந்து சுமார் 273 அடிகள் உயரமுள்ள பிரமாண்டமான ஒற் றைப்பாறையின் மீது அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் சன்ன தியிலிருந்து, மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார்சன்ன தியை சென்றடைய வேண்டுமானால் 437 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும்.

மலைக்கோட்டையின் படிக்கட்டுகள் சாதாரணமானவை அல்ல. அவை பாறையைக் குடைந்து செய்யப்பட் டவை மற்றும் மிகவும் செங்குத்தானவை ஆகும். இதன் காரணமாக பெண்கள், வயதானவர்கள் உச்சிப்பகுதிக்கு சென்று விநாயகரை தரிசிக்க முடியாத நிலை உள்ளது. மூட்டு தேய்மானம், தசை பலவீனம் மற்றும் இதயம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் உள்ள முதியவர்கள், சில படிகள் ஏறிய உடனேயே கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகிறார்கள்.
எனவே தரையில் இருந்து மலை உச் சிக்குசெல்வதற்கு வசதியாக ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட கால கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 1977-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மலைக்கோட் டைக்கு ரோப் கார் அமைக்கும் திட் டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்காக ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதன் பின் வா எந்த வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து கடந்த தி.மு.க. ஆட்சியில் அறநிலையதுறை அமைச்சராக இருந்த சேகர்பாபு வந்து திருச்சி மலைக்கோட்டை கோவிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல ரோப் கார்வசதி செய்துதரப்படும். இதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராயப்படும் என்றும் கூறினார்.
அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 31 அன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு முக்கிய அறிக்கையை வெளி யிட்டார். அதில், தமிழகத்தில் பக்தர்களின் வசதிக்காக விரைவில் ரோப்கார் அமைக்கப்படவுள்ள 5 முக்கிய கோவில்களின் பட்டியலில் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலும் சேர்க்கப் பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

தொடக்கத்தில் தீவிரமாக ஆராயப் பட்ட இந்தத் திட்டம். இறுதியாக 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் “சாத்திய மில்லை” எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையால் கைவிடப்பட்டது. மலைக்கோட்டை மத்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருப்பதாலும், பழமையான பாறை அமைப்பிலோ அல்லது கோட்டையின் சுவர்களிலோ எந்தவித சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் காரணமாக சாத்திய கூறுகள் இல்லை என கூறி இது தொடர்பான கோப்பு மூடப்பட்டது.

இப்படி 1977-ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்த திட்டம் சுடந்த 49 ஆண்டுக ளாக களவு திட்டமாகவே உள்ளது. மலைக்கோவில்களில் போக்குவரத்தை சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள எளிதாக்க மத்திய அரசு ஒரு ஆய்வு மேற் கொண்டது. இதில் திருச்சி மலைக் கோட்டை கோவில் வளாகத்திற்கு வெளியில் சுமார் 1 கி.மீ தொலைவிலிருந்து ரோப்கார் இயக்குவதற்கான சாத்தியக்கூ றுகள் பற்றி ஆராயப்பட்டன. எனவே, சரியான திட்டமிடல் இருந்தால் இதைத் தொழில் நுட்பரீதியாகச் செயல்படுத்த முடியும்.

பாறையைக் குடையாமலும் கோவிலின் பாரம்பரியக் கட்டமைப்பிற்குச் சேதம் விளைவிக்காமல், நவீன மோனோ-கேபிள் மூலம் ரோப்கார் வசதியை ஏற்படுத்த முடியும் என தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறி உள்ளனர். இது, போன்ற ரோப் கார் வசதிகள் இந்திய அளவில் சிம்லாவில் உள்ள ஜக்கு கோவில் மற்றும் கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள புகழ், பெற்ற ஜக்கு அனுமன் கோவிலுக்குச் செல்ல நவீன மோனோ-கேபிள் மூலம் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டு பயன் பாட்டில் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து ஒரு திட்டத்தை தீட்டினால் இதனை செயல்படுத்திக்காட்ட முடி யும்.விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு. மக்கள் நலத் திட்டங்களை யும், நீண்ட காலமாக முடங்கிக் கிடக் கும் உள்கட்டமைப்புத் திட்டங்களை யும் கையில் எடுத்துச் செயல்படுத்தும், என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவ–லாக எழுந்துள்ளது. எனவே முதல் அமைச்சர் விஜய் இதனை ஒருசவாலாக-ஏற்று செயல்படுத்த உத்தரவிட வேண். டும் என்பது பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக  உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.