பேருந்தில் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை : காவல்துறையினர் வழக்குப்பதிவு

0 24
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 30 பேருந்தில் ஏறி கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை – தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரல் – போலீஸ் விசாரணை

திருச்சி கிஆபெ அரசு மருத்துவ கல்லூரியில் பாரா மெடிக்கல் மூன்றாம் ஆண்டு பயிலும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரஹீமா (வயது 20) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் ரஹீமாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் ரஹீமா பணம் தர மறுத்துள்ளார். திருநங்கை ரகிமாவை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார், இதனையடுத்து துறையூர் பேருந்து வரவும் ரஹீமா பேருந்தில் ஏறியுள்ளார், ரஹீமாவை பின் தொடர்ந்து பேருந்தில் ஏறிய திருநங்கை ரகிமாவை தகாத வார்த்தைகளில் பேசி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அது பேருந்தில் இருந்த CCTV-யில் பதிவானது.

இது குறித்து ரஹிமா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிபடையில் அந்த திருநங்கை மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.