திருவெறும்பூரில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய இஸ்லாமியர்கள்

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலின் 63-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அப்பகுதி பள்ளிவாசலில் ஜமாத்தார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிவாசல் ஜமாத்தார் தலைமையில், பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள் பயணித்த சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும், வெயிலில் ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் குடிநீர் வழங்கி அன்புடன் உபசரிக்கப்பட்டது.

இஸ்லாமிய பள்ளிவாசல் ஜமாத்தினரின் இந்த மனிதநேயப் பணி, அப்பகுதி மக்களிடையே மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

இப்பகுதி பொதுமக்கள் மதங்களை கடந்து நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் இருக்கும் வகையில் அனைவரும் இந்தச் செயலை வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.