எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் ஏரி ரூ.26.5 கோடியில் புனரமைப்பு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் ஏரி ரூ.26.5 கோடியில் புனரமைப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொல்லாங்குளம் ஏரி உள்ளது. திருச்சி நகரின் பல்வேறு இடங்களில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீர் வந்து சேருவதால் ஏரியின்கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே இந்த ஏரியின் கரைகளை பலப்படுத்தி, புனரமைப்பு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொழுதுபோக்கு மையமாக மாற்ற மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கொல்லாங்குளம் ஏரியின் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகளுக் காக 2022-23-ம் ஆண்டின் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.20.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டடது. அதன்படி முதற்கட்ட சீரமைப்பு மற்றும் உட்கட்ட மைப்பு மேம்பாட்டு பணிக ளுக்காக ரூ.8 கோடியே 91 லட்சமும், 2-ம் கட்டமாக நடைபயிற்சி பாதை, பூங்கா உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிகளுக்காக கூடுதலாக ரூ.8 கோடியே 91 லட்சமும், பத்தை ஒட்டியுள்ள ஏரிப்பகு கட்டத்திற்கு கருமண்ட 3-ம் கட்ட தியின் மேம்பாடு மற்றும் தடுப்பு சுவர்கள் போன்ற பணிகளுக்காககு 6கோடியே40 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. மேலும் இதர பணிகளுக்காகரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக்கொண்டு கிராப்பட்டி மற்றும் எடம லைப்பட்டிபுதூர் பகுதிகளில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் கழிவுநீர் ஏரிக்குள் நேரடியாக கலப்பதை தடுக்க, ஒரு நாளைக்கு 2 மில்லியன் லிட் டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட பிரத்யேக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட உள்ளது. இதற்காக தற்போது ஏரியின் நடுவே கழிவு நீர் செல்லும் வகையில் கழிவுநீர் வடிகாலுக்கான கட் ளப்பட்டு வருகிறது. மேலும் டுமான பணிகள் மேற்கொள் கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த புனரமைப்பு மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட உள்ளன.  திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் பூங்கா, நடைபயிற்சி பாதை, சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதனால் எடமலைப்பட்டி புதூர் மற் றும் கருமண்டபம் ஆகிய இரு பெரும் பகுதிகளை இணைக்கும் இந்த ஏரி, மாநகராட்சி யின் 56, 57 மற்றும் 58 ஆகிய 3 வார்டுகளின் எல்லைக்குட் பட்ட பொதுமக்களுக்கு மிக முக்கிய பொழுதுபோக்கு மையமாக அமைய உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.