த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் வாழ்த்து

0 37
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 7  தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சிவபதி -க்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் தவெக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிற கட்சிகளில் இருந்து பிரிந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தார்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சிவபதி அவர்களை நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அருகில் லால்குடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் டோமினிக், முன்னாள் கவுன்சிலர் கார்த்திக் ராஜன், எஸ் டி வி பிரபு, அஸ்வினி மெடிக்கல் மோகன், வெங்கட் பிரபு, செந்தில் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், டேனியல், ஐஸ்வர்யா, மேனகா மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர்கள், மணிகண்டம் ஒன்றிய செயலாளர்கள், சிறுகாமணி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் உறையூர், புத்தூர், தில்லைநகர், தென்னூர், பீமா நகர், ஜங்ஷன், கருமண்டபம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தவெக பகுதி செயலாளர்கள் மற்றும் மாணவர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள், தொண்டரணி, மகளிர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.