சமூக வலைதளத்தில் அவதூறு: தி.மு.க.வினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்
திருச்சி, ஜூலை 9 திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசி ரியை ரெ.மதனா. தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப் பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில், முகநூலில் சிலர் அவரை ஆபாசவார்த்தைகளால் திட்டி பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, அவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதை தொடர்ந்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குறைதீர்ப்பு முகாமில் அவர் இதுபற்றி புகார் மனு கொடுத்தார். அதில் “என்னுடைய கண்ணியத்தையும், மரியாதையையும் பாதிக்கும் வகையில் பொய்யான தகவல்களை தி.மு.க.வை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். என்வே சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை விசாரித்து ஆபாச மற்றும் அவ தூறு கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.