முன்னாள் காங். எம்.பி. திருநாவுக்கரசர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கல்

0 267
Stalin trichy visit

திருச்சி, ஜுலை 13  மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்  சு. திருநாவுக்கரசர்  பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ்  தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஷீலாசெளஸ் ஆகியோர் முன்னிலையில் கே கே நகரில் உள்ள ஸ்ரீ சங்கர கருணாலயத்தில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கோட்டதலைவர் பிரியங்கா பட்டேல், சிறும்பான்மை பிரிவு மாநில துணை தலைவர் மொகைத்தின், மகிளா காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் அபிநயா, அணி தலைவர்கள் மனித உரிமை பிறந்தநாள் ஆறுமுகம், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விஜய் படேல், தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு தலைவர் பிரபாகரன், சண்முகம், வார்டு நிர்வாகிகள் சண்முகம், சிவலிங்கம், பால்சாமி, சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.