வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திருச்சி எம் பி துரை வைகோ:-
வியட்நாம் நடந்த படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த அழகுராஜா, பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இன்று மாலை படகு விதத்தில் பரிதாபமாக உயிரிழந்த மூவர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள உயிரிழந்த அழகுராஜா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த அழகு ராஜாவின் உறவினர்கள் எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அழகு ராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கி உதவி செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதுகுறிப்பு கலெக்டருடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக துரை வைகோ எம்பி தெரிவித்தார்.