துவரங்குறிச்சி அருகே மின்கம்பி உரசி தீப்பற்றி எரிந்த தென்னை மரம்

0 71
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. தற்போது அதிக அளவில் காற்று அடிப்பதால் தென்னை மரத்தின் மட்டைகள் உயர் மின்னழுத்த கம்பிகளில் பட்டு எரியத் தொடங்கியது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சிறப்பு நிலை சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

மேலும் இனிவரும் காலங்களில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் மின்வாரியத்தினர் மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தினால் இது போன்ற தீ விபத்து ஏற்படாது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் மின்சார கம்பிகள் செல்லக்கூடிய பகுதிகளில் மரக்கிளைகள் தாழ்வாக தொங்குகின்றன. இதனை மின்வாரியத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.