சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
திருச்சி, ஜூலை 27 திருச்சி மாவட்டம்,மணிகண்டம் ஒன்றியம், ஓலையூ ரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா தலை மையிலான போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது ஓலையூர் அருகே மறைவான பகுதியில் சீட்டாட்டத் தில் ஈடுபட்டனர்.போலீசார் அங்கு வருவதைப் பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர் இதில் 6 பேரை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத் தினர்.
இதில் அவர்கள் ஓலையூரை சேர்ந்த குமார் (வயது 37), திருமலைசமுத்திரம் கருப்பையா நவல்பட்டு அயன்புத்தூர் வீரமணி (41), பாரதி (24), மாத்தூர் கைனாங்கரை மாரிமுத்து (50), குண்டூர் பர்மா காலனி முருக வேல் (34) என்பதும், அவர்கள் தொடர்ந்து அப்பகுதியில் பணம் | வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு . வருவதும் தெரியவந்தது. இதைய டுத்து அவர்களை கைது செய்த / போலீசார் தப்பி ஓடியவர்கள் மற் |றும் கைது செய்யப்பட்டவர்கள் அங்கு நிறுத்தியிருந்த 11 மோட் . டார் சைக்கிள்கள் மற்றும் அவர்களிடம் இருந்து ரூ.15,500, சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.