பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

0 95
Stalin trichy visit

திருச்சி, ஆக.6 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு

துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவி கடந்த 7-4-2022 அன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெற்றோர் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை மருங் காபுரி தாலுகா கஞ்சநாயக்கன் பட்டி, செட்டிய பட்டி, கோவில் பாறைக்களம் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சின்னையா (வயது 21), கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அத்துடன் சின்னையா ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சிறுமி மாயம் என்ற வழக்கை மாற்றி, சின் னையா மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளர கோர்ட்டில் நீதிபதி சண்முகபி ரியா முன்னிலையில் நடந்து வந் தது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சுமதி ஆஜரா னார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சின்னையாவுக்கு போக்சோ சட் டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்

Leave A Reply

Your email address will not be published.